மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியை. சிகிச்சை அளிக்காமல் அழுகிய காலுடன் வீல்சேரில் அழைத்து வந்து, வெளியே தூக்கிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் பகுதிக்கு உட்பட்ட சாலை ஓரம், பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி காலில் புண்ணுடன் கிடந்துள்ளார்.
இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர், அவரை மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சை அளிக்காமல், பிணவரைக்கு வெளியே உள்ள சாலையில் விசி சென்றுள்ளனர்.
இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில், நோயாளியை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்ததாக இரண்டு பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.