நாடு முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இந்த காய்ச்சலுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே நாடு முழுவது இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதுத் குறித்து அண்மையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், இன்புளுயன்சா காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இன்புளுயன்சா வைரஸ் பரவல் குறித்து அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குறிப்பாக மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், மருத்துவ பொருள்கள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்திம், குழந்தைகள், முதியோர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட வகையில் தீவிர விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்புளுயன்சா காய்ச்சலுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று சொல்லப்பட்ட நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
திருச்சியில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு இருந்ததும், அதனால்தான் அவர் பலியானதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.