கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தில் கொளஞ்சி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு பிள்ளைகள் எதுவும் இல்லை. ஆகவே, தன்னுடைய சகோதரியின் மகன் ராஜதுரை என்பவரை அவர் தனது வாரிசாக வளர்த்து வந்துள்ளார். இத்தகைய நிலையில் அந்தப் பெண் கொளஞ்சிக்கு செல்லதுரை என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். எங்கே இந்த நெருக்கத்தால் தனக்கு வரவேண்டிய சொத்துக்கள் அனைத்தயும் செல்லதுரைக்கு பெரியம்மா எழுதி வைத்து விடுவாரோ என்று பயந்து போன ராஜதுரை தனது பெரியம்மாவை அவருடனான தொடர்பை துண்டிக்க சொல்லி கண்டித்து இருக்கிறார். ஆனால், கொளஞ்சி தனது காதலனை கைவிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, ராஜதுரை இருவரையும் போட்டு தள்ளிவிட்டு சொத்துக்களை அபகரித்துக் கொள்ள முடிவெடுத்து தன்னுடைய உறவினர்கள் முருகேசன் மற்றும் அன்பழகன் இருவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி இருக்கின்றார். வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பாலத்தில் கொளஞ்சி மற்றும் செல்லதுரை இருவரும் நெருக்கமாக இருந்தபோது அங்கு வந்த ராஜதுரை மற்றும் அவரது உறவினர்கள் இருவரும் சேர்ந்து செல்லதுரையை அறிவாளால் வெட்டி இருக்கின்றனர்.
அப்போது தப்பியோட முயன்ற ராஜதுரையின் பெரியம்மா கொளஞ்சியை அவர்கள் டிராக்டரை ஏற்றி கொன்று இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் அன்பழகன் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து விட்டார். மேலும், தலைமறைவாக இருக்கும் முருகேசன் மற்றும் ராஜதுரை இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.