தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக நேற்று (மார்ச் 12) ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வை மருத்துவமனையின் தலைவரும் இரப்பை குடல் இயல் நிபுணருமான மருத்துவர் டி.நாகேஷ்வர் ரெட்டி பரிசோதித்தார்.
வயிற்று உபாதை மற்றும் வயிற்றில் அல்சர் இருப்பது மருத்துவப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மற்ற அனைத்து அளவுருக்களும் இயல்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர் (சந்திரசேகர் ராவ்) ஏ.ஐ.ஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார், அதைத் தொடர்ந்து சிடி மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. வயிற்றில் ஒரு சிறிய அல்சர் இருப்பது கண்டறியப்பட்டது, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் பேரணியில் பெண் நிர்வாகி ‘ஹாட்’ முத்தம்.. சர்ச்சையில் சிவசேனா எம்எல்ஏ..!
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் விரைவில் உடல் நலம் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.