பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்க சரும ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும்.
அந்த வகையில் பீட்ரூட் சாறு உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தவது இன்னும் சில பயன்களை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பார்ப்போம்.
(9NENSN)
தேவையான பொருட்கள்:
-
ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி ( வரண்ட சருமம் கொண்டோர் என்றால் இதனை தவிருங்கள்).
-
½ தேக்கரண்டி மஞ்சள்.
-
1 டீஸ்பூன் தேன்.
-
1 டீஸ்பூன் கற்றாழை.
பீட்ரூட் ஃபேஸ் பேக் செய்வது எப்படி
-
மேற்குறிப்பிட்ட பொருட்களை 2 டீஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
-
ஒரு தடித்த மென்மையான பேஸ்ட் தயார்.
-
பீட்ரூட் ஃபேஸ் பேக் கலவையை சருமத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு சுடு தண்ணீரில் கழுவினால், சிறந்த பலன் கிடைக்கும்
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- இரத்த ஓட்டம் மேம்பட உதவும்.
- இரத்த அழுத்ததினை குறைக்க உதவும். மற்றும் சகிப்பு தன்மை அதிகரிக்க உதவும்.
-
முகம் பளிச்சென்று பிரகாசமடையும்.
சருமம் மிருதுவாகும். - ஒரு சங்கிலி எதிர்வினை மூலம், உங்கள் உடல் நைட்ரேட்டுகளை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது, இது இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது.