திண்டுக்கல்: பழனி அருகே கிணறு தோண்ட வைத்திருந்த வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பழனி அருகே வடபருத்தியூர் கிராமத்தில் கிணறு தோண்டுவதற்காக வெடி வைத்திருந்த போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தியூர் கிராமத்தில் விவசாயி செல்லத்துரை என்பவர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கிணறு தோண்ட ஆழமாக வெட்டும் போது பாறை இருந்ததால் வெடி வைத்து குழி தோண்டும் முடிவு செய்யப்பட்டது. அப்போது கிணறு வெட்டும் பணியில் சின்னராசு என்பவர் மகன் மணி கிணற்றுக்குள் இறங்கி வெடி மருந்து வைப்பதற்காக தற்காலிக பந்தலில் வைத்த போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.