பழனி அருகே கிணறு தோண்டும் பணியின்போது வெடி வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவரின் சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்ததது. அப்போது ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து தகர்க்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கிணறு வெட்டும் பணியிலிருந்த கள்ளிமந்தயத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (30) என்பவர், கிணற்றுக்குள் இறங்கி வெடி மருந்தை வைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அது சட்டென வெடித்துவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM