சென்னை: தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மேலும், ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் இருந்து குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது. இதற்கான உத்தரவை சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ளாா். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறவன் குறத்தி உள்பட நாட்டுப்புற கலைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதாக, […]