பிரதமர் மோடியை தீர்த்து கட்ட வேண்டும்; காங்கிரஸ் தலைவர் சர்ச்சை.!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறிய கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளாத பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தியது.

கூட்டத்தில் உரையாற்றிய ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா பேசும்போது, “அதானி மற்றும் அம்பானியை அகற்ற வேண்டும் என்றால், முதலில் மோடியை முடித்து கட்ட வேண்டும். பிறகு பாஜகவை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.

அனைவரும் அதானியைப் பற்றி பேசுகிறார்கள், அதே நேரத்தில் பிரதமர் மோடியை பற்றியும் நாம் பேச வேண்டும் என்று ராந்தவா கூறினார். அவர் நாட்டை அழிக்கிறார், மத்தியில் உள்ள பாஜக நாட்டை விற்கிறது என்று சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூறினார். காங்கிரஸின் போராட்டம் அதானியுடன் அல்ல, நேரடியாக பாஜகவுடன் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதல் பிரச்சினையையும் எழுப்பினார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய அவர், “ஜவான்கள் எப்படி வீரமரணம் அடைந்தார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா, “மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது. மோடியை முடிக்க மக்களைத் தூண்டுவது போலவும், புல்வாமாவில் பாகிஸ்தானுக்கு க்ளீன் சிட் வழங்குவது போலவும் காங்கிரஸ் தலைவர் பேசி வருகிறார்” என்றார்.

பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

“காங்கிரஸ் அவரை பதவி நீக்கம் செய்யுமா அல்லது வெகுமதி அளித்து அவரது அறிக்கையை நியாயப்படுத்துமா?” என்று பாஜக தலைவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.