பிரான்ஸ் முன்வைத்துள்ள ஓய்வூதிய மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரீஸ் தெருக்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பை
துப்புறவுப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து, பாரீஸ் தெருக்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.
குப்பைகளை எரிக்கும் மூன்று மையங்கள் வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தெருவோரங்களில் ஏராளம் பிளாஸ்டிக் பைகளையும் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளையும் காணமுடிகிறது.
விடயம் என்னவென்றால், இப்படி தெருக்களில் குப்பை குவிந்தும், எலிகள் நடமாட்டம் காணப்பட்டும், மக்களில் ஒரு பகுதியினர் இந்த வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதுதான்.
Photo: Thomas SAMSON / AFP