மூட்டு வலி என்று கூறும்போதே அதில் வலி தெரியும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அது வலி தரும்.
மூட்டு வலி உடனடியாக தீவிரம் அடையாது. ஆனால் அது வந்துவிட்டால் வலி அதிகரிக்கும்.
உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உடலின் அனைத்து எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக காணப்படுகிறது. உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானதாகின்றது.
மூட்டு வலி வருவதற்கான அறிகுறிகள்
-
மூட்டு வீக்கம்
- மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு
- மூட்டு சிவந்து காணப்படும்
- நெஞ்சுவலி
- மூச்சுவிட முடியாமல் திணறுவது
- இருமல்
- காய்ச்சல்
- அதிகப்படியான வியர்வை
- உடல்எடை குறைதல்
- உடல் அதிக குளிரான சூழலை எதிர்கொள்ளுதல்
- கண்கள் வலிப்பது
- கண் சிவந்து காணப்படும்
- ஒரு வாரத்துக்கும் மேலான தீவிர மூட்டுவலி
- படிக்கட்டுகளில் ஏற மிகவும் சிரமப்படுவது
யாருக்கெல்லாம் வரும்?
வயது போனவர்களுக்கு தான் அதிகமாக மூட்டு வலி வரும்.
இருப்பினும் உடல் எடை அதிகம் கொண்டவர்களுக்கும் மற்றும் 40 வயதை தாண்டியவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்பு உண்டு என பல மரபியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூட்டு வலியால் ஏற்படும் பாதிப்பு?
-
ஆர்த்ரைட்டிஸ் (arthritis)என்ற மூட்டு வீக்கம்
முடக்குவாதம்
எலும்பில் தொற்றுப்பாதிப்பு ஏற்படும். -
எலும்பு நோய் (rickets)
எலும்பைச் சுற்றியுள்ள இணைப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். - ‘ஹெபடைட்டிஸ்’ போன்ற தொற்றுநோய் பிரச்னைகள்.
- இரண்டுக்கும் மேற்பட்ட மூட்டில் கடுமையாக வலி.
- எலும்பு வீக்கம்
- கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்கும்.
சிகிச்சை
அன்றாடம் பயன் படுத்தும் எண்ணெய்களை பயன் படுத்தி இந்த வலிகளை சுலபமாக குணப்படுத்தலாம்.
-
நல்லெண்ணெய் 100 மில்லி,கடுகு எண்ணெய் 100 மில்லி மற்றும் வேப்ப எண்ணெய் 50 மில்லி கலந்து நன்றாக சூடு படுத்தி ஆறிய பின்னர் கட்டி சூடம் சிறிதளவு போட்டு கலந்து இந்த எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் பூசிவந்தால் வலி சரியாகும்.
-
உருளைக்கிழங்கை சிறுதாக வெட்டி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் வலி தீரும்.
-
ஒரு தே.கரண்டி கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
-
ஒரு தே.கரண்டி பாசிப்பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.
இவ்வாறு இந்த சிகிச்சையை செய்து வந்தால் மூட்டு வலியில் இருந்து தீர்வை பெறலாம்.
ஆனால் நிரந்தர தீர்விற்கு வைத்தியரை நாடுவது சிறந்தது. அறுவை சிகிச்சை செய்து கொள்வதம் சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.