மொத்தமாக நொறுங்கிப் போன குடும்பம்… இரண்டு இளம் வயது நண்பர்கள்: வெளியான முதல் புகைப்படம்


பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் பகுதியில் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான இரு இளம் வயது நண்பர்கள் தொடர்பில் உறவினர்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோர விபத்து

ஞாயிறு அதிகாலையில் நார்தம்பர்லேண்ட் பகுதியில் குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 17 வயதான Riley Hedley மற்றும் 16 வயதான Mikey Easton ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.

மொத்தமாக நொறுங்கிப் போன குடும்பம்... இரண்டு இளம் வயது நண்பர்கள்: வெளியான முதல் புகைப்படம் | Two Teen Friends Killed In Horror Crash

A196ல் நடந்த இந்த கோர விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவயிடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தால் நொறுங்கிப்போன நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தற்போது இரண்டு சிறுவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் நேரடியாக பார்த்த எவரேனும், காணொளியாக பதிவு செய்திருந்தால் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

காப்பாற்ற முடியவில்லை

விபத்து தொடர்பில் தகவல் தெரியவந்ததும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்ததாகவும், ஆனால் தங்களால் இயன்ற அளவு முயற்சித்தும், அவர்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக நொறுங்கிப் போன குடும்பம்... இரண்டு இளம் வயது நண்பர்கள்: வெளியான முதல் புகைப்படம் | Two Teen Friends Killed In Horror Crash

@North News

பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் சிறப்பு அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இணை பிரியாத இரு நண்பர்களும், தற்போது இணைந்தே இறுதி பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.