சென்னை: வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது; சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் – வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன.வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.