வீட்டுச் சுவர்களில் வழிந்த திரவம்… பிரித்தானிய தம்பதியருக்கு காத்திருந்த ஆச்சரியம்

இங்கிலாந்திலுள்ள கென்டில் வாழும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் படுக்கையறையில் கருப்பாக ஒரு திரவம் வழிவதைக் கவனித்துள்ளார்கள்.

காத்திருந்த ஆச்சரியம்

Kate மற்றும் Andrew Dempseyஎன்னும் அந்த தம்பதியர், வாசனை வீசும் அந்த திரவம் என்ன என கண்டுபிடிப்பதற்காக அவர்கள் வீட்டுக்குள் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த பலகைகளை அகற்றினால், அங்கே இராட்சத தேன் கூடுகள் இருப்பதைக் கண்டு வியப்பிலாழ்ந்துள்ளார்கள்.

அவற்றை அகற்ற, பணியாளர்களைத் தேடினால், அவர்கள் 10,000 பவுண்டுகள் கேட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நண்பர்கள் உதவியுடன் தாங்களே தேன்கூட்டை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர் தம்பதியர்.
 
வீட்டுச் சுவர்களில் வழிந்த திரவம்... பிரித்தானிய தம்பதியருக்கு காத்திருந்த ஆச்சரியம் | A Surprise Awaited The British Couple

Image: Kate Dempsey / SWN

20 பைகள் நிறைய தேன்

நான்கு வாரங்களாக இந்த தேன் கூடுகளை அகற்றும் பணி நடக்க, ஒருநாள் காலை அறை நிறைய தேனீக்கள் இருப்பதைக் கண்டு உள்ளூர் தேனீ வளர்ப்பவர்களை அழைக்க, அவர்கள் வந்து பார்த்துவிட்டு, இவை கொள்ளைக்காரத் தேனீக்கள், அந்த தேனை திருட வந்துள்ளன என்று கூற, இப்படியெல்லாம் நடக்குமா என வியப்பிலாழ்ந்துள்ளார்கள் தம்பதியர்.

ஒருவழியாக, ஒவ்வொன்றாக தேன் கூடுகளை அகற்றிக்கொண்டே வந்தால், 20 பெரிய குப்பை போடும் கவர் நிறைய தேன் கிடைத்ததாம் அந்த அறையிலிருந்து.

முக்கியமான விடயம் என்னவென்றால், ஒருவர் கூட தேனீக்களிடமிருந்து ஒரு கொட்டுகூட வாங்கவில்லை என்பதுதான்.  

வீட்டுச் சுவர்களில் வழிந்த திரவம்... பிரித்தானிய தம்பதியருக்கு காத்திருந்த ஆச்சரியம் | A Surprise Awaited The British Couple

Image: Kate Dempsey / SWNS

Image: Kate Dempsey / SWNS)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.