தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுத இருந்தனர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வான தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.