வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேப் கனாவெரல் :அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் தங்கள், ஐந்து மாத விண்வெளி பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் பூமிக்கு திரும்பினர்.
விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்ணான, நாசாவின் நிக்கோல் மேன் தலைமையில், நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு அக்., மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
இந்த குழுவில், நிக்கோல் மேனை தவிர, அமெரிக்க விண்வெளி வீரர் ஜோஷ் கஸாடா, ரஷ்யாவின் அனா கிக்கினா, ஜப்பானின் கொய்ச்சி வகாட்டா ஆகியோர் விண்வெளிக்கு சென்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஐந்து மாதங்கள் தங்கி இருந்தனர்.
விண்வெளியில் இருக்கும் குப்பையை நீக்குவது, ரஷ்ய, ‘காப்ஸ்யூல்’களில் ஏற்பட்ட கசிவுகளை சரி செய்வது, வேறு குழுவில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு மாற்று காப்ஸ்யூல்களை அளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து முடித்தனர்.
தங்கள் ஐந்து மாத விண்வெளி பயணத்தை முடித்துக், ஸ்பேஸ் எக்ஸ் ‘கேப்சூல்’ வாயிலாக 19 மணி நேரம் பயணித்து, அமெரிக்காவின் புளோரிடா கடற்கரைக்கு அருகே உள்ள தம்பா என்ற இடத்தில் தரை இறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூன்று அமெரிக்கர்கள், மூன்று ரஷ்யர்கள், ஒரு ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த வீண்வெளி வீரர்கள் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement