7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‛எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'
லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவின் நாட்டு நாட்டு பாடல், ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' ஆகியவை ஆஸ்கர் விருது வென்றன. ஹாலிவுட் படமான ‛எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது.
உலகளவில் சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கவுரவிக்கப்படுவது ஆஸ்கர். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் இன்று(மார்ச் 13, இந்திய நாள்) நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல், முதுமலை யானைகளின் பின்னணியில் உருவான 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற டாகுமெண்டரி குறும்படம், அவதார் த வே ஆப் வாட்டர், டாப்கன் மேவரிக் உள்ளிட்ட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டன.
இந்திய படங்களுக்கு 2 ஆஸ்கர்
இதில் ஆர்ஆர்ஆர் பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த டாகுமெண்டரி குறும்படத்திற்கு 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.
7 விருதுகளை குவித்த ‛எவ்ரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'
ஹாலிவுட் படமான எவ்ரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் 11 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவற்றில் சிறந்த படம், இயக்குனர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, படத்தொகுப்பு மற்றும் சிறந்த கதை ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.
5 விருதுகளை அள்ளிய ‛ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்'
முதல் உலகப்போரின் பின்னணியில் உருவான ஜெர்மனி படமான ‛ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்', சிறந்த வெளிநாட்டு திரைப்படம், ஒளிப்பதிவு, இசை, பட தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆகிய 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
சிறந்த நடிகராக தி வேல் படத்திற்காக தி பிரெண்டனும், சிறந்த நடிகையாக எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்திற்காக மிச்செலி இயோவும் ஆஸ்கர் விருதை வென்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆப் வாட்டர் படம் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவில் மட்டும் ஒரே ஒரு விருதை வென்றது.
ஆஸ்கர் விருதுகள் விபரம் வருமாறு…
* சிறந்த படம் : எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
* சிறந்த நடிகர் : பிரெண்டன் பிராசர் (படம் : தி வேல்)
* சிறந்த நடிகை : மிச்செலி இயோ (படம் : எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
* சிறந்த துணை நடிகர்: கீ ஹ்யூ குவான் (எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
* சிறந்த துணை நடிகை: ஜேமி லீ கர்டிஸ் (படம் : எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
* சிறந்த இயக்குனர் : டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (படம் : எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
* சிறந்த ஆவணப்படம்: 'நாவல்னி'
* சிறந்த குறும்படம்: 'ஐரிஷ் குட்பை'
* சிறந்த ஒளிப்பதிவாளர்: ‛ஜேம்ஸ் பிரண்ட்' (படம் : ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்)
* சிறந்த படத்தொகுப்பு : பால் ரோஜர்ஸ் (படம் : எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
* சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்
* சிறந்த ஒப்பனை: 'தி வேல்' திரைப்படம்
* சிறந்த ஆடை வடிவமைப்பு: ரூத் கார்டர் (படம் :'பிளாக் பேன்தர் வாகாண்டா பார்எவர்')
* சிறந்த ஆவண குறும்படம்: ‛தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்'
* சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: 'அவதார்-2'
* சிறந்த ஒரிஜினல் பாடல் : நாட்டு நாட்டு
* சிறந்த அனிமேஷன் திரைப்படம்: 'பினோச்சியோ'
* சிறந்த இசை : வோல்கர் பெர்டெல்மேன் (படம் : ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்)
* சிறந்த பட தயாரிப்பு : (படம் : ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்)
* சிறந்த ஒலிப்பதிவு : படம் : டாப் கன் மேவரிக்
* சிறந்த திரைக்கதை : எட்வர்ட் பெர்கர், லெஸ்லி பேட்டர்சன் மற்றும் இயான் ஸ்டாக்கெல் ( (படம் : ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்)
* சிறந்த கதை : டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (படம் : எவரிதிங்க் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)