விக்னேஷ் சிவன்
வாய்ப்பு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. லைக்காவின் தயாரிப்பில் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து AK62 படத்திற்கான கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார் விக்னேஷ் சிவன். எட்டு மாதங்களுக்கு பிறகு அஜித்திடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் தன் கதையை கூறினார் விக்னேஷ் சிவன். அதன் பிறகு தான் அவருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது
ட்விஸ்ட் அதுதான் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டார்களே என்ற எண்ணத்தில் விக்னேஷ் சிவன் சாதாரணமான ஒரு கதையை அஜித்திடம் கூறியதாகவும், அதனால் கடுப்பான அஜித் விக்னேஷ் சிவனை AK62 படத்திலிருந்து நீக்கியதாகவும் தான் இதுவரை தகவல்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு கதை சரியில்லை என்றால் கதையை மாற்றச்சொல்வார்களே தவிர இயக்குனரையே மாற்றுவார்களா என்பது தான் பலரது கேள்வியாக இருக்கின்றது. எனவே இந்த விஷயத்தில் ஏதோ ஒன்று நடந்திருக்க, அது அஜித்திற்கு பிடிக்காத காரணத்தால் தான் விக்னேஷ் சிவனை படத்திலிருந்து நீக்கியிருக்கக்கூடும் என சிலர் பேசி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாம் தான் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் என நம்பியிருந்த விக்னேஷ் சிவனுக்கு இது மிகப்பெரிய ட்விஸ்ட்டாக அமைந்தது.
அடுத்தகட்டம் தற்போது அஜித் தன் 62 ஆவது திரைப்படத்தை மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதே சமயம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன பிறகு ஒரே கஷ்டகாலமாக இருப்பதால் இருவரும் ஜோசியரிடம் சென்று சில ஆலோசனைகளை கேட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. விக்னேஷ் சிவனுக்கு அஜித் படவாய்ப்பு பறிபோனதும், நயன்தாரா நடிக்கும் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதும் என அடுத்தடுத்து தோல்விகளாக வருவதால் இருவரும் ஜோசியரை நாடியுள்ளனர். இதையடுத்து விரைவில் விக்னேஷ் சிவன் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது
பதிவு இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டு மிகவும் உருக்கமான ஒரு பதிவை போட்டிருந்தார். அவமானமும், தோல்வியும் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும் என பதிவிட்டிருந்த விக்கி என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி எனவும் கூறியிருந்தார். இந்த பதிவை போட்ட சில மணி நேரங்களில் ஒரு காட்டமான பதிவையும் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதாவது அவரது ட்விட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்துவிட்டனர். இதனால் கடுப்பான விக்கி கட்டமாக ஒரு பதிவை போட்டிருந்தார். ஏற்கனவே பல ட்ரோல்களால் மனஉளைச்சலில் இருக்கும் விக்கிக்கு இது மேலும் கடுப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது