Oppo Find N2 Flip இந்தியாவில் 79,999 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம்! கவர்ச்சியான மடிப்பு டிசைன்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சீனாவின் Oppo நிறுவனம் Foldable ஸ்மார்ட்போன் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யபட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டு ஸ்க்ரீன் டிஸ்பிலே இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Mediatek Octa Core Dimensity 9000+ SOC உள்ளது.

விலை விவரம்

இந்தியாவில் Oppo Find N2 Flip 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 89,999 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Astral Black மற்றும் Moonlit Purple ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதனை Flipkart, Oppo Store மற்றும் நேரடி கடைகளில் வாங்கலாம்.

இதற்கு HDFC, ICICI, Kotak, IDFC, HDB, SBI, American Express ஆகிய வங்கிகளின் கார்டு பயன்படுத்தினால் 5 ஆயிரம் ரூபாய் Cashback சலுகையும், பழைய Oppo கருவிகளுக்கு கூடுதல் சலுகையாக 5 ஆயிரம் ரூபாய் சலுகையும் கிடைக்கிறது.

டிஸ்பிலே விவரம்

இந்த போனில் 6.8 இன்ச் முழு HD+ (1080×2520 Pixels) AMOLED டிஸ்பிலே, 120HZ Refresh Rate, 1600 nits பிரைட்னஸ், 403 PPI, 240HZ டச் சாம்ப்ளிங் ரேட், பின்பக்கம் கவர் டிஸ்பிலே வசதியாக 382 x 720 Pixels, 60HZ, 250 ppi Pixel Density உள்ளது.

கேமரா வசதி

இதில் ஒரு டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முக்கிய கேமெராவாக 50MP Sony IMX890 கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் Sony IMX355 சென்சார் உள்ளது. இதன் முன்பக்கம் செல்பி கேமெராவாக 32MP Sony IMX709 RGBW சென்சார் உள்ளது.

கனெக்டிவிட்டி வசதிகள்

இந்த ஸ்மார்ட்போனில் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ், 5G, 4G LTE, ப்ளூடூத் 5.3, GPS/A-GPS, NFC, Type-C போர்ட், Accelerometer, Gyroscope, Hall Sensor, Proximity சென்சார் உள்ளது. இதில் அண்டர் ஸ்க்ரீன் ஆம்பிஎண்ட் லைட்டிங், அண்டர் ஸ்க்ரீன் கலர் டெம்பெரேச்சர் சென்சார் உள்ளது.

மற்ற வசதிகள்

போனில் 4300mAh டூயல் செல் பேட்டரி, 44W Super VOOC சார்ஜிங், 80W சார்ஜ்ர் உள்ளது. இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார், Face unlock, 191g எடை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் பிலிப் போனிற்கு போட்டியாக வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.