95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.
இந்நிலையில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நாட்டு நாட்டுவுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் கடவுளே என இந்திய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது வென்று நாட்டு நாட்டு பாடல் புது சாதனை படைத்திருக்கிறது.
இசையமைப்பாளர் கீரவாணிக்கும், பாடலாசிரியர் சந்திரபோஸுக்கும் விருது வழங்கப்பட்டது. Top Gun: Maverick படத்தில் வந்த லேடி காகாவின் ஹோல்ட் மை ஹேண்ட், Black Panther: Wakanda Forever, படத்தில் வந்த ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் உள்ளிட்ட பாடல்களை தோற்கடித்துள்ளது நாட்டு நாட்டு.
இந்த விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு மட்டும் இல்லை The Elephant Whisperersக்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. Best Documentary Short Subject பிரிவில் விருது பெற்றிருக்கிறது. All That Breathes படம் சிறந்த ஆவண ஃபீச்சர் ஃபிலிம் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு விருது கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இந்தியாவுக்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருந்திருக்கும்.
நாட்டு நாட்டு பாடலுக்கு கடந்த ஜனவரி மாதம் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தான் அந்த விருது கிடைத்தது. இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவில் ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை பாட லாரன் கோட்லீப் டான்ஸ் ஆடினார்.
இந்த ஆஸ்கர் விழாவில் விருது வழங்கினார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். Persis Khambatta, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை அடுத்து ஆஸ்கர் விருது வழங்கிய மூன்றாவது இந்தியர் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.
Ajith: மகிழ்திருமேனி அல்ல ஷங்கருக்காக வெறித்தனமாக மாறிய அஜித்?!: ப்ப்பா, இது வேற லெவல்
முன்னதாக ஆடை வடிவமைப்பாளர் பானு அதையா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். பாடலாசிரியர் குல்சார், சவுண்டு என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, இயக்குநர் சத்யஜித் ரே ஆகியோர் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்கள் ஆவர். அந்த பட்டியலில் கீரவாணியும், சந்திரபோஸும் சேர்ந்திருக்கிறார்கள்.
நாட்டு நாட்டு பாடல் உக்ரைனில் இருக்கும் அரண்மனைக்கு வெளியே படமாக்கப்பட்டது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆங்கிலேயர்களுக்கு இடையேயான போட்டி பாடலாக அமைந்தது. இறுதியில் ஜூனியர் என்.டி.ஆர். தான் ஜெயிப்பார். ராம் சரண் விட்டுக் கொடுத்து ஜூனியர் என்.டி.ஆரை ஜெயிக்க வைப்பார்.