அகமதாபாத்,
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆனாலும், இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வென்ற இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றது.
இதனிடையே, 4-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் விராட் கோலி 186 ரன்கள் குவித்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் விராட் கோலி கூறியதாவது,
இந்த போட்டியை நான் அனுகிய முறையை பொறுத்தவரை, இந்த போட்டியிலும் இதற்கு முந்தைய போட்டியிலும் நான் சிறப்பாக விளையாடிவருகிறேன் என்று எனக்கு தெரியும்.
உண்மையை கூறவேண்டுமானால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் ஆடுவது மிகவும் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவும் இந்த ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தின.
நான் அமைதியாக இருக்க வேண்டும். நான் என் தடுப்பாட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த முறையில் தான் நான் எப்போதும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறேன். எனது தடுப்பாட்டம் தான் என் வலிமைக்கான புள்ளி. ஏனென்றால் நான் தடுப்பு ஆட்டத்தை சிறப்பாக கையாண்டால் பந்து சற்று நிலைதடுமாறும்போது அதை அடிக்கலாம். எனக்கான ரன்களை பெற முடியும்’ என்றார்.