மும்பை,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.அகமதாபாத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நேற்று டிராவில் முடிவடைந்தது
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இடையேயான 3-வது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. முதல் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்ந்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இறுதியில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் மொத்தம் 3 நாட்களில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் சுழற்பந்துக்கு சாதகமாகவே இந்த மைதானம் இருந்தது. பெரும்பாலான விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். இந்தூர் கிரிக்கெட் மைதானம் மிகவும் மோசமான ஆடுகளம் என்று ஐஐசி மதிப்பீடு செய்தது.இந்தூர் ஆடுகளத்துக்கு 3 தகுதி இழப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அறிவித்தார்.
ஒரு மைதானம் 5 ஆண்டு காலத்துக்குள் 5 மற்றும் அதற்கு அதிகமான தகுதி இழப்பு புள்ளியை பெறும் பட்சத்தில் அந்த மைதானத்தில் ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் இந்தூர் டெஸ்ட் ஆடுகளத்துக்கு ஐசிசி வழங்கிய அபராதப் புள்ளிகளுக்கு எதிராக பிசிசிஐ மேல்முறையீடு செய்துள்ளது .
இதையடுத்து ஐசிசியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து தங்களுடைய முடிவை அறிவிப்பார்கள்.