உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் தென்ஆபிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார்.
இவர் தற்போது எசுபேசுஎக்சுநிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், “டெஸ்லா மோட்டார்ஸ்“ நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப கால முதலீட்டாளர் இவர் ஆவார்.
தற்போது, எலான் மஸ்கின் நிகர சொத்துமதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது.
உலகின் பணக்கார பெண்மணி
Forbes இன் படி, பிரான்சின் Françoise Bettencourt Meyers தற்போது உலகின் பணக்கார பெண்மணி இவர்.
லோரியால் நிறுவனத்தின் நிறுவனர் இஜின் ஸ்சுல்லர்-ன் பேத்தி ஆவார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 68 வயதான பெட்டன்கோர்ட் வெற்றிகரமான தோல் பராமரிப்பு மற்றும் ஒப்பனை பிராண்டான loreal ன் உரிமையாளராவார்.
ஜனவரி 2022 நிலவரப்படி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவர் $94.9 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி இவர் என கருதப்படுகின்றது.