ஒன்றல்ல… 20 வங்கிகள் கடும் நெருக்கடியில்: மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் கோரும் நிபுணர்கள்


அமெரிக்காவில் சுமார் 20 வங்கிகள் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதலீடுகளுக்கு உத்தரவாதம் கோரியுள்ளனர் நிபுணர்கள்.

ஜனாதிபதி பைடன் மக்களுக்கு உரை

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியானது திவாலாகி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், மேலும் பேரழிவைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.

ஒன்றல்ல... 20 வங்கிகள் கடும் நெருக்கடியில்: மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் கோரும் நிபுணர்கள் | Dozens Of Banks Shares Fell Temporarily Halted

@reuters

பங்கு சந்தை வர்த்தகம் செயல்பாட்டுக்கு வரும் சில நிமிடங்கள் முன்பு பேசிய ஜனாதிபதி பைடன், நமது வங்கி அமைப்பு பாதுகாப்பானது என்று அமெரிக்க மக்கள் நம்பலாம் என்றார்.

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் முதலீடு செய்திருந்த மக்களின் பணம் பத்திரமாக உள்ளது என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தும், சுமார் 20 வங்கிகளின் பங்கு வர்த்தகம் சரிவடைந்து காணப்பட்டது.

ஒன்றல்ல... 20 வங்கிகள் கடும் நெருக்கடியில்: மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் கோரும் நிபுணர்கள் | Dozens Of Banks Shares Fell Temporarily Halted

@AP

மட்டுமின்றி, வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய சரிவு இந்த சிலிக்கான் வேலி வங்கி திவாலான சம்பவம் எனவும், 2008க்கு பின்னர் மிக மோசமான சூழல் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மிகப்பெரிய வீழ்ச்சி

இதனிடையே, ஐரோப்பிய வங்கிகளின் பங்குகளும் ஒரு வருடத்திற்கு பின்னர் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மட்டுமின்றி டொலரின் மதிப்பும் சற்று சரிவை எதிர்கொண்டது.

ஐரோப்பாவின் வங்கிக் குறியீடு வெள்ளியன்று 3.8 சதவீதம் குறைந்து 6 சதவீதம் சரிந்தது.
இதனிடையே, சுமார் 20 வங்கிகள் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ள நிலையில், மக்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபுணர்கள் தரப்பு ஜனாதிபதி பைடனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒன்றல்ல... 20 வங்கிகள் கடும் நெருக்கடியில்: மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் கோரும் நிபுணர்கள் | Dozens Of Banks Shares Fell Temporarily Halted

@AP

தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்து அவுன்சுக்கு 1,885 டொலராக இருந்தது. மட்டுமின்றி எண்ணெய் விலை 1.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதுடன் பீப்பாய் ஒன்றின் விலை 81.48 டொலருக்கும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 75.28 டொலர் எனவும் பதிவாகியிருந்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.