விற்பனைக்கு வந்த நாள் முதலே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன்புற ஃபோர்க் உடைந்த நிலையில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளிவந்த நிலையில், இறுதியாக முன்புற ஃபோர்க் முற்றிலும் இலவசமாக மாற்றித்தர முன்வந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பலவீனமாக இருப்பதாகவும், பெரிய அளவிலான பள்ளங்களில் தாங்கவில்லை என்றும் பல புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. பல உரிமையாளர்கள் ஓலா S1 ஸ்கூட்டரின் உடைந்த முன் சஸ்பென்ஷனின் படங்களைப் பகிர்ந்து வந்தனர்
இந்நிறுவனம் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையில், முன் ஃபோர்க் பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது ஆதாரமற்றது என்று நாங்கள் நம்புகிறோம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘தங்கள் தொடர்ச்சியான பொறியியல் மற்றும் வடிவமைப்பு மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக’ நீடித்துழைப்பை மேம்படுத்துவதற்கும் அதை மேலும் வலுப்படுத்துவதற்கும் முன் ஃபோர்க் வடிவமைப்பை மேம்படுத்தியுள்ளோம்.
புதிய முன்பக்க ஃபோர்க்கிற்கு மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘ஆப்ஷன்’ வழங்குகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கிறது. தனித்துவமானது, வாடிக்கையாளருக்கு விருப்பத்தை அளித்து உற்பத்தியாளர் தங்கள் வாகனங்களை திரும்ப பெறுவதை நாங்கள் பார்த்ததில்லை.
இலவசமாக மாற்றுங்கள்
ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் அல்லது சேவை மையத்தில் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்து, புதிய ஃபோர்க் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.
வரும் மார்ச் 22 முதல் மாற்றப்படுவதனால் முன்பதிவு செய்வதற்கான விரிவான செயல்முறைக்கு நிறுவனம் உரிமையாளர்களுக்கு விரைவில் தெரியப்படுத்த உள்ளது.
உங்களிடம் ஓலா ஸ்கூட்டர் இருந்தால், அப்பாயிண்ட்மெண்ட்டை எடுத்துக்கொண்டு, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முன்பக்க ஃபோர்க்கை மாற்றிக்கொள்ளுங்கள்.