கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மதம் நடைபெறுகிறது. இச்சூழலில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு சென்றார். அங்கு பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பதிலடி தந்த மோடி, இந்திய ஜனநாயகம் பற்றிய அவரின் கருத்துக்கள் இந்தியா மற்றும் கடவுள் மீதான தாக்குதலாகும். லண்டன் மண்ணில் இருந்து இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
இவர்கள் பகவான் பசவேஸ்வரரையும், கர்நாடக மக்களையும், இந்திய மக்களையும் அவமதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து கர்நாடகம் விலகி இருக்க வேண்டும் என்றார்.