கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது.
நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.இந்தியாவில் ரேபிஸ் நோய் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 30 முதல் 60 சதவிகிதம், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது.
நாய்கள் ஏன் கடிக்கின்றன?
“ஒவ்வொரு நாயும் தன் எல்லையை வரையறுத்துக்கொள்கிறது. ஒருபுறம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. மறுபுறம் நாய்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அவைகளின் பரப்பளவு குறையத் தொடங்கியுள்ளது. அப்பகுதியை பாதுகாப்பது கடினமாகும்போது நாய்கள் பாதுகாப்பின்மையை உணர ஆரம்பிக்கின்றன. மனிதன் தங்கள் பகுதிக்குள் நுழைகிறான் என்று நினைக்கத்தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அவை ஆக்ரோஷமாக மாறுகின்றன
வெப்பநிலை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, போக்குவரத்து இரைச்சல், பிரகாசமான விளக்குகள் போன்ற காரணிகளும் தெருநாய்களை பாதிக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகள் அவற்றை ஆக்ரோஷமாக்குகின்றன.
“பலர் நாயைக் கொண்டு வந்து வீட்டின் ஒரு மூலையில் கட்டி வைத்துவிடுகின்றனர். மக்களுடன் கலந்து பழகாத, மூலையில் கட்டிவைக்கப்பட்ட அந்த நாய் ஆக்ரோஷமாக மாறுகிறது. அது பாதுகாப்பின்மையை உணர்கிறது. அது அதிக ஆக்ரோஷமாக இருந்தால் கடிக்க வாய்ப்புள்ளது.”
சில சமயங்களில் வீடுகளில் உள்ள நாய்களுக்கு, கொடுக்க வேண்டியதை விட அதிக உணவு கொடுக்கப்படுகிறது அல்லது அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டிய விகிதத்தில் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில் உடல் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவை ஆக்ரோஷமாக மாறுகின்றன.
நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும்?
ஒருவரை தெரு நாய் கடித்தால், அந்த நாளில்தான் அதற்கு தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதி அது கண்காணிக்கப்படுகிறது. ஆகவே ஒரு தெருநாய் கடித்தால், நீங்கள் கட்டாயமாக ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.”
முதலில் நாய் கடித்த இடத்தை தண்ணீர் மற்றும் சோப்பினால் குறைந்தது பத்து நிமிடங்களாவது கழுவ வேண்டும்.
வழக்கமாக, வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே ரேபிஸ் ஆபத்து இல்லை. அந்த நிலையில் அதை ஒரு சாதாரண காயம் போல கருதுங்கள். ஆனால் ஒரு தெரு நாய் உங்களைக் கடித்தால், நாயை கண்காணியுங்கள். நாய் இறந்தால், ‘ரேபிஸ் தடுப்பூசி’ போட்டுக்கொள்ள வேண்டும்