“மகிழட்டும் மாற்றுத்திறனாளி வழங்குவோர் திராவிட போராளி ” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது’ முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பாடியில் நடைபெற்றது.
விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று 300 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள், அரிசி 1500 ரூபாய் ரொக்கம் அடங்கிய தொகுப்பு 5 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனம் ஆகியவை வழங்கினர்.
வணிகவரித்துறை அமைச்சர் சென்ற ஆண்டைவிட இந்த வருடம் வணிக வரித்துறையின் 24 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக பதிவுத் துறையில் 3500 கோடி அதிகமாக வரி கிடைத்துள்ளதை கூறிய அவர் பத்திரப்பதிவில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் 2000-திற்கும் மேல் தீர்வு காணப்பட்டுள்ளது . முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை களையவும் , மோசடிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து 3 மாதத்திற்குள்ளாக நிச்சயம் தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார் .