பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் மார்ச் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி| Forced conversion in Pakistan Hindu organizations rally on March 30

கராச்சி: பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது ஹிந்து சிறுமியரை கடத்தி திருமணம் செய்வது போன்ற சம்பவங்களை கண்டித்து வரும் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளன.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்வதாகவும் அவர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் அங்குள்ள ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும் ஹிந்து சிறுமியரை கடத்தி முஸ்லிம்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து இந்த சம்பவங்களை கண்டித்து வரும் 30ல் சிந்து சட்டசபை கட்டடத்தில் மாபெரும் பேரணி நடத்த சிறுபான்மையினர் நலனுக்காக போராடும் ‘பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட்’ என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தப் பேரணிக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட் தலைவர் பகர் ஷிவா குச்சி கூறுகையில் ”மார்ச் 30ல் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்பர். ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்தப் பேரணி நடத்தப்படுகிறது” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.