இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியில், நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு, எதிராக ஜாமினில் வெளி வர முடியாத ‘வாரன்ட்’ பிறப்பித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இம்ரான் கான் இன்று கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement