உத்தரப்பிரதேசத்தில், பொதுவெளியில் சரியாக உடை அணியவில்லை என மனைவியைக் கணவன் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர் சப்னா என்றும், கொலைசெய்த நபர் மோஹித் குமார் என்றும் தெரியவந்திருக்கிறது.
காஜிபூர் கிராமத்தில் வசித்த இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும் சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம், சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மோஹித் குமார், கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு, தன்னுடைய மனைவியின் கழுத்தில் தாக்கியதில் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர், போலீஸை அழைத்து இதுபற்றி கூறியிருக்கின்றனர். பின்னர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலைசெய்யப்பட்ட சடலத்தின் அருகே அமர்ந்திருந்த மோஹித் குமாரைக் கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில், பொதுவெளியில் சரியாக ஆடை அணியாததால் தன்னுடைய மனைவியைக் கொன்றதாக மோஹித் குமார் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக, வட்ட அதிகாரி சர்ஜனா சிங் கூறினார்.