வாஷிங்டன்: வங்கிகள் மூடல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ஜோடன் பாதியில் இருந்து வெளியேறினார்.
அமெரிக்க வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால்,சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. மற்றொரு வங்கியும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அதிபர் பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வங்கிகள் சரிவு தொடர்பாக அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ” வங்கிகள் சரிவை சந்தித்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்… என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளிக்க முடியுமா.. என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
இந்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், மவுனமாக பைடன், பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது மற்றொரு பத்திரிகையாளர் மற்றொரு கேள்வி எழுப்பினார். அதனை கவனிக்காமல் அறையை விட்டு வெளியேறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement