ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஷைன் 100 அல்லது வேறு ஏதேனும் பெயருடன் வெளியாக உள்ள மாடலின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஸ்ப்ளெண்டர், HF 100, HF டீலக்ஸ், பிளாட்டினா பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விற்பனையில் உள்ள சிபி ஷைன் 125 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்ட்டிருக்கும் புதிய 100சிசி பைக் மைலேஜ் அதிகபட்சமாக 70 கிமீ எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா Shine 100
ஷைன் 100 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் இரட்டை பின்புற ஷாக் அப்சார்பர், ஐந்து-ஸ்போக் அலாய் வீல் உடன் பிரேக்கிங் அமைப்பில் முன் மற்றும் பின்புற டிரம் கூடுதலாக டிஸ்க் ஆப்ஷன் வரக்கூடிய வாய்ப்புகள் குறைவே ஆகும்.
100சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8 bhp பவர் மற்றும் 8 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கலாம்.
ஹீரோ ஸ்ப்ளெண்டர், ரேடியான் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகிய மாடலுக்கு போட்டியாக வரவிருக்கும் 100சிசி ஹோண்டா கம்யூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.