Udhayanidhi Stalin: அமைச்சரான கையோடு அந்த தொழிலை கைவிட்ட உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2008ம் ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான குருவி படம் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமானவர்
உதயநிதி ஸ்டாலின்
. இதையடுத்து சூர்யாவின் ஆதவன் படத்தை தயாரித்ததுடன், அதில் கவுரவத் தோற்றத்திலும் வந்தார்.

4 படங்களை தயாரித்த நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து சந்தானம் செய்த காமெடி தான் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருந்த உதயநிதி ஹீரோவானதும் அதை ரசிகர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு பெரிய படங்களை எடுப்பவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலினை அணுகி அவரது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வெளியிடுமாறு கேட்டு வருகிறார்கள். அவரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் உதய்ணா எனும் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் தான் நடித்திருக்கும் கண்ணை நம்பாதே படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, நான் ரெட் ஜெயண்ட்ல இருந்து வெளியே வந்துவிட்டேன். அர்ஜுன் மற்றும் செண்பகமூர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் இனி யாரும் சினிமா தொடர்பாக என்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் கூறியதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சினிமா துறையில் உங்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்த தொழிலை போய் கைவிட்டுவிட்டீர்களே அண்ணா. நீங்கள் கடைசி வரைக்கும் மக்கள் சேவையுடன் சேர்த்து கலை சேவையும் செய்ய வேண்டும்.

மீண்டும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும். சினிமா தொடர்பாக உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Sai Pallavi, Leo: அஜித்தின் துணிவை அடுத்து விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் கண்ணை நம்பாதே படம் மார்ச் 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை நான்கு ஆண்டுகளாக எடுத்தார்கள். தன் கெரியரிலேயே நான்கு வருஷமாக எடுக்கப்பட்ட ஒரே படம் கண்ணை நம்பாதே தான் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

படங்களில் வருவது போன்று தான் ஒரே பாடலில் அமைச்சராகிவிடவில்லை என்று கூறியிருக்கிறார். கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருப்பதாக கூறுகிறார் உதயநிதி.

கண்ணை நம்பாதே படத்தில் நடித்தபோது தான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றே நினைக்கவில்லை என்கிறார் உதயநிதி ஸ்டாலின். கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததாலும் படம் ரிலீஸாவதில் தாமதமாகியிருக்கிறது.

கண்ணை நம்பாதே படத்தில் ஒரேயொரு பாட்டு தான் இருக்கிறது. படம் முழுக்க இரவில் தான் வருமாம். இரவில் எடுக்கப்பட்ட கைதி, 96 ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. அதனால் அந்த இரவு ராசி உதயநிதி ஸ்டாலின் படத்திற்கும் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.