ஆஸ்கர் விருதுக்கு பின் சுற்றுலாத்தலமாக மாறிய தெப்பக்காடு

சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது நிகழ்வில் இந்தியாவிலிருந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவிலும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவிலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் அனாதையாக வந்த ரகு மற்றும் பொம்மி என்கிற இரண்டு யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியரின் அர்ப்பணிப்பு உணர்வு, யானைகளிடம் அவர்கள் காட்டும் பாசம் ஆகியவை குறித்து உணர்வு பூர்வமாக இந்த டாக்குமென்டரி உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த ரகு மற்றும் பொம்மி என்கிற யானைகள் தற்போது முதுமலை அருகில் உள்ள தெப்பக்காடு என்கிற யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த டாக்குமென்டரி படம் ஆஸ்கர் விருது பெற்றதை தொடர்ந்து இந்த யானைகளையும் இதை வளர்த்த பொம்மன் மற்றும் பெல்லி இருவரையும் பார்ப்பதற்காக தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தெப்பக்காடு பகுதியை தேடி வர ஆரம்பித்துள்ளனர். நிறைய வெளிநாட்டு பயணிகளும் கூட சமீபத்திய ஆஸ்கர் விருது அறிவிப்புக்கு பிறகு இந்த பகுதிக்கு அதிக அளவில் வருவதாக வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.