பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீசார் ஊழல் வழக்கில் கைது செய்ய முயற்சி செய்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.
போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர் உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்ததால் கலவரச் சூழல் காணப்பட்டது.
போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். இம்ரான்கான் வீட்டின முன்பு நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இம்ரான் கான் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவர் வீட்டுக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தாம் கைது செய்யப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ மக்கள் திரண்டு நீதியைக் காக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று இம்ரான் கான் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டதால் பெரும் திரளாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.