கருங்கடலில் பதற்றம்: அமெரிக்க ட்ரோன் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல் – என்ன நடந்தது?

ரஷ்ய விமான படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தது. அப்போது ரஷ்ய போர் விமானம், அமெரிக்காவுக்கு சொந்தமான ட்ரோன் மீது மோதியிருக்கிறது, இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து அமெரிக்க ஐரோப்பிய கட்டுப்பட்டு அறை அளித்த தகவலில் இரண்டு ரஷ்ய Su-27 போர் விமானங்கள் சர்வதேச கடல் வழியில் ,ஆளில்லா MQ-9 ரீப்பர் விமானத்தின் மீது மோதி அதன் ப்ரொப்பல்லரை (propeller) சேதப்படுத்தியதாக தெரிவித்திருக்கிறது.

ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்பதை ரஷ்யா மறுத்துவிட்டது. மேலும், ஆளில்லா போர் விமானம் கட்டுப்பாடற்ற வகையில் பறந்தது. MQ-9 விமானத்தை இயக்கியவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள ஒதுங்கியபோது, அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து நீரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது” என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.

ஆளில்லா விமானம்

இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பின்னர், “ரஷ்யர்களின் மறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் விழுந்த ஆளில்லா விமானம் தவறான நபர்களிடம் செல்வதைத் தடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதால், எங்களைபாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.