கர்நாடக பாஜக எம்.எல்.சி. வீட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக பாஜக எம்.எல்.சி. ஆர். சங்கர் வீட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ. 40 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் ரானெபென்னூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது சட்ட மேலவை உறுப்பினராகவும் பாஜக கட்சியில் உள்ள ஆர்.அசோக் உள்ளார். அவரது வீட்டில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தபோது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6,000 புடவைகள் இருந்தது, அதுமட்டுமின்றி 9,000 அட்டை பெட்டிகள் இருந்தது. அதில் சுமார் 1000 குக்கர், 1000 பள்ளி மாணவர்களுக்கு வழங்க பைகள் என 9,000 பரிசு பொருட்கள் புரிந்த செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மடிப்பு சுமார் ரூ.40லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கருதப்படுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பரிசு பொருட்களை வழங்குவதை தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து வணிக வரித்துறை, வருமான வரித்துறை என பல்வேறு துறையினர் ஆங்காங்கே அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது ஆளும் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் வீட்டலிலேயே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரிசு பொருட்களுக்கான உரிய ரசீது இல்லாததால் இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உரிய ரசீதை ஒப்படைத்து விட்டு பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர். ரசீது வழங்கப்படாத பட்சத்தில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.