மும்பையில் பெண்ணின் உடல் பாகங்கள் கழிவறை தொட்டியில் கண்டறியப்பட்டதை அடுத்து அவரது மகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலமாரியில் உடல்
மும்பையின் லால்பாக் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனது தாயைக் கொன்றதாக கூறப்படும் ரிம்பிள் ஜெயின் என்ற 23 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையிலுள்ள அவரது வீட்டிலுன் அலமாரியில் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலைக் கண்டெடுத்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
@ani
ரிம்பிள் ஜெயினின் தாயான வீணா ஜெயினின் உடல் பாகங்களான எழும்பு மட்டும் சதை துண்டுகள் அடைக்கப்பட்ட இரும்புப் பெட்டி கழிவறை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கழிவறையில் இரும்புப் பெட்டி
இறந்த பெண்ணின் சகோதரரும் மருமகனும் கடந்த செவ்வாய் கிழமை மும்பை காவல்துறையை அணுகி வீணா ஜெயினை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் வீணா ஜெயினின் முதல் மாடி குடியிருப்பில் சோதனையிட்ட போது அலமாரியில் சிதைந்த நிலையிலிருந்த உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டிருந்திருக்கிறது.
@ani
மேலும் கழிவறையிலிருந்த தொட்டியில் சிறிய இரும்புப் பெட்டியில் வெட்டப்பட்ட எழும்பு மற்றும் சதை துண்டிகள் அடைக்கப்பட்டுக் கிடந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் துறை அவரது மகள் ரிம்பில் ஜெயினை கைது செய்து விசாரித்து வருகிறது.
இன்னும் கொலைக்கான காரணங்களும், எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தகவல்களும் தெரியவில்லை.
@ani
கடந்த டிசம்பர் மாதத்தில் வீணா ஜெயின் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் வீட்டில் நடந்த கொலைகளில் இதுவும் ஒன்று. டெல்லியின் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில், 28 வயதான ஆப்தாப் பூனாவாலா என்பவர் தனது காதலியைக் கொன்று, குளிர்சாதனப் பெட்டியில் அவரது உடலின் பாகங்களை வைத்திருந்தார், பின்னர் டெல்லியின் மெஹ்ராலி காடுகளில் ஒவ்வொன்றாக வீசி எறிந்துள்ளார்.