காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு… படுகாயமடைந்த கடை விற்பனையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது கடந்த மூன்றாம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயம் அடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள கடையில் விற்பனையாளர் அர்ஜுனன் அன்று இரவு கடையை பாதியளவு அடைத்துவிட்டு மது விற்பனை கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை வைத்து கடைக்குள் வீசினார்.

இதனால் ஏற்பட்ட தீயில்  அறுபது சதவீத தீக்காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜுனன் இன்று உயிரிழந்தார்.

ராஜேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுவால் தன் குடும்பம் சீரழிந்து வருவதால் கோபத்தில் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் ராஜேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.