புதுடெல்லி: பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்பட உள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை (சியூடிஇ) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும் என்று பல்கலை மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர் கூறியதாவது:
பல்கலைக் கழங்களுக்கான பொது நுழைவு தேர்வில் கடந்தாண்டு பல்வேறு தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டன. , இந்த முறை மாணவர்கள் தொழில்நுட்ப பிரச்னைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை.
கியூட் தேர்வை ஜேஇஇ, நீட் தேர்வுகளுடன் சேர்த்து நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அப்படி நடத்தும் பட்சத்தில், அது பற்றி 2 ஆண்டுகளுக்கு முன் கூட்டியே மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.