குழாயை அழகாக திறந்து விட்டு, குட்டி குளியல் போட்ட கிளி; வைரலான வீடியோ

டொரண்டோ,

கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, மனிதர்கள், குரங்குகள் உள்ளிட்ட பாலூட்டி வகைகளுடன் ஒத்து போகிற அளவுக்கு கிளிகள் அறிவாற்றல் கொண்டவை என தெரிய வந்து உள்ளது.

அவை கணக்குகளை தீர்க்கும் திறன்கள், தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆற்றல், எண்ணிக்கை, கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றுடன் பூஜ்யம் பற்றிய விசயங்களையும் கூட புரிந்து கொள்ளும் திறன் படைத்தவை என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

அவை பல்வேறு பாஷைகளை கற்கும் திறனுடன், மனிதர்களுடன் தொடர்பு கொள்வதும், இசை கருவிகளை மீட்டுவதும் மற்றும் வர்ணம் தீட்டுவது போன்ற பல்வேறு வேலைகளிலும் ஈடுபட கூடிய ஆற்றல் கொண்டவை.

இந்நிலையில், சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கிளி ஒன்று வெப்பம் தணிய குழாய் ஒன்றை திறந்து விட்டு, கூலாக குளியல் போடுகிறது.

அதனை வளர்க்கும் நபர் அதற்கு தெரியாமல், குழாயை மூடுகிறார். தண்ணீர் வருவது நின்றதும் திரும்பி பார்க்கும் அந்த கிளி, குழாயை தனது வாயால் திறந்து விடுகிறது. பின்னர் மீண்டும் குளியல் போடுகிறது.

திரும்ப, திரும்ப இதுபோன்று குழாயை மூடினாலும் சளைக்காமல், அதனை திறந்து விட்டு தனது வேலையில் அந்த கிளி கவனமுடன் ஈடுபடுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.