ஜேர்மனியில் மாணவி ஒருவர் கொடூரமாகக் குத்திக்கொல்லப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்தது இரண்டு சிறுமிகள் என தெரியவந்ததால் ஜேர்மனியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
மாயமான சிறுமி சடலமாக மீட்பு
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Louise என்னும் 12 வயது மாணவி, தனது தோழியைக் காணச் சென்ற நிலையில் மாயமானார்.
Pic: AP
Louiseஇன் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவளைத் தேடும் முயற்சியில் இறங்க, வனப்பகுதி ஒன்றின் அருகே அமைந்துள்ள சைக்கிள் செல்லும் பாதையின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் Louise.
அவளது உடலில் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன.
Pic: AP
குற்றவாளிகள் யார் என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி
இந்நிலையில், Louiseஐக் கொலை செய்ததாக 12 மற்றும் 13 வயதுள்ள இரண்டு மாணவிகள் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, 14 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவரை கிரிமினல் குற்றவாளி என சட்டம் கூறுவதில்லை.
ஆகவே, அந்த சிறுமிகள் இருவரும் கைது செய்யப்படாமல் இளைஞர் நல அலுவலகம் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
Freudenberg நகர மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
North Rhine-Westphalia மாகாணமே துக்கம் அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ள மாகாண கவர்னரான Hendrik Wuest, சிறுபிள்ளைகளால் இப்படிப்பட்ட பயங்கர செயல்களைச் செய்யமுடியுமா என்பதை புரிந்துகொள்ளவோ நம்பவோ முடியவில்லை என்று கூறியுள்ளார்.
Pic: AP