உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே காயபுரம் கிராமத்தில் ரூ.14.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மைய கட்டிடதை எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்தார். உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட சகாயபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.14 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதிசுதாகர் அனைவரையும் வரவேற்றார். உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்து கொண்டு ரூ.14.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடத்தை திறந்துவைத்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கிளை செயலாளர் சீனு, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.