வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராய்ப்பூர்: ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை ஒதுக்க கோரி சத்தீஷ்கர் சட்டசபையை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
சத்தீஷ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகல் உள்ளார். இம்மாநிலத்தில் ஏழை எளியவர்களுக்கு பிரதமரின் அனைவரும் வீடு திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்கிட கோரி பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
பா.ஜ.வைச் சேர்ந்தவர்கள் ஏழைகளுக்கு உடனடியாக வீட்டு மனை ஒதுக்கிட சத்தீ்ஷ்கர் அரசு உத்தரவிட கோரி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement