பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள பல பகுதிகளில் கட்டமைப்புக் கோளாறுகளால், சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
சுமார் மூன்று ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க சீனா முடிவெடுத்திருக்கிறது. அதனால் அந்த நாட்டு அரசு வெவ்வேறு வகை விசாக்களை வழங்கிவருகிறது.
AUKUS நாடுகள் இணைந்து புதிய அணுசக்தியால் இயங்கும் ராணுவ கப்பல் ஒப்பந்தத்தைப் பிறப்பித்திருக்கும் நிலையில், இந்த நாடுகள் `ஆபத்தின் பாதையில்’ சென்றுவருவதாக சீனா குற்றம்சாட்டியிருக்கிறது.
அமெரிக்காவில் வெறுப்பு சார்ந்த குற்றங்கள் 2021-ம் ஆண்டில் 12 சதவிகிதம் அதிகரித்ததாக Federal Bureau of Investigation (FBI) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மெட்டா நிறுவனம் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ், போயிங் நிறுவனத்திடமிருந்து 78 ஜெட்லைனர்களை வாங்க முடிவெடுத்திருக்கிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியில் ஃப்ரெடி சூறாவளியில் சிக்கி இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இரானில், அரசாங்கத்துக்கு எதிராக நடந்துவந்த போராட்டங்களில் (மாஷா அமினி வழக்குக்காக) கைதுசெய்யப்பட்ட 22,000 பேரை அந்த நாட்டு முதன்மைத் தலைவர் மன்னித்துவிட்டதாக அந்த நாட்டு நீதித்துறை அறிவித்திருக்கிறது.
சீன ராணுவ மருத்துவரான ஜியாங் யான்யோங் தன் 91-வது வயதில் காலமானார். இவர் 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவலின் முழு விவரங்களை வெளிக்கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகப் பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இரண்டு குறுகிய பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வட கொரியா மீண்டும் பரிசோதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.