கன்னியாகுமரி: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரு நாள் பயணமாக நாளை மறுநாள் காலை (18ம் தேதி) கன்னியாகுமரி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி, தனி படகு மூலம் கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். பின்னர், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா கோயிலில் சென்று வழிபடுகிறார் சிறிது நேரம் கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கிருந்து மீண்டும் கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ஜனாதிபதி அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி செல்கிறார்.