டாலருக்கு போட்டியாளராக முன் நிறுத்தப்படும் இந்திய ரூபாய்: பிரித்தானியா உட்பட 18 நாடுகளுக்கு அனுமதி


பிரித்தானியா மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த வங்கிகள்  ரூபாய் வர்த்தகத்திற்கான vostro கணக்குகளை திறக்க RBI ஒப்புதல் அளித்துள்ளது.

வோஸ்ட்ரோ கணக்குகளுக்கு அனுமதி

உலக வர்த்தகத்தில் டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் INR இல் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், செயல்முறையை சீராக செய்வதற்கும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டாலருக்கு போட்டியாளராக முன் நிறுத்தப்படும் இந்திய ரூபாய்: பிரித்தானியா உட்பட 18 நாடுகளுக்கு அனுமதி | Uk 17 Countri Approved Vostro Accounts Rupee TradeiStock

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் தீர்த்து வைப்பதற்காக வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் மார்ச் 14ம் திகதி எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கார்ட், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற முக்கிய நாடுகளை சேர்ந்த வங்கிகள் உட்பட 18 நாடுகளை சேர்ந்த உள்நாட்டு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வங்கிகளுக்கு ஸ்பெஷல் ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க மத்திய வங்கி இதுவரை 60 அனுமதிகளை வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.

டாலருக்கு போட்டியாளராக முன் நிறுத்தப்படும் இந்திய ரூபாய்: பிரித்தானியா உட்பட 18 நாடுகளுக்கு அனுமதி | Uk 17 Countri Approved Vostro Accounts Rupee TradePTI


18 நாடுகள்

போட்ஸ்வானா, பிரித்தானியா, பிஜி, ஜேர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா மற்றும் உகாண்டா.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய மத்திய வங்கி, சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகளை அமைப்பதாக அறிவித்து இருந்தது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.