எம்.பி
வீட்டை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் திருச்சியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்களுக்குள் நடந்துள்ள மோதலால் உடன்பிறப்புகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இது திமுக தலைமைக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது.
திருச்சு சூர்யா பேட்டி
இந்த விவகாரம் தொடர்பாக ’சமயம் தமிழ்’ சார்பில் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தாக்கப்பட்டது என் அப்பாவின் வீடு. பாஜகவில் சேர்ந்ததில் இருந்து நான் தனியாக தான் வசித்து வருகிறேன். அப்பாவின் வீட்டிற்கு அருகில் பேட்மிண்டன் மைதானம் ஒன்றை கட்டியுள்ளனர். இதற்கான திறப்பு விழாவிற்கு இன்று காலை வந்துள்ளனர்.
கல்வெட்டில் பெயர் இல்லை
அங்கு கல்வெட்டில் எம்.பி திருச்சி சிவாவின் பெயர் இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு எதிர் தரப்பினரின் ஆதரவாளர்கள் வீட்டில் வந்து தாக்கியுள்ளனர். தற்போது அப்பா அரசு முறைப் பயணமாக பஹ்ரைன் சென்றுள்ளார். எனவே அவர் ஊரில் இல்லை. தவறுதலாக என்னுடைய வீட்டை தாக்கியதாக நினைத்து கொள்வதாக தெரிவித்தார்.
இரண்டு பேருக்கும் ஆகாது
அப்பா திருச்சி சிவாவிடம் பேசினீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு, இல்லை. பாஜகவிற்கு வந்ததில் இருந்தே எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லை. அதுமட்டுமின்றி அவர் தற்போது வெளிநாடு சென்றிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே திருச்சி சிவா மற்றும் கே.என்.நேருவிற்கு இடையில் ஆகாது. வீடு தாக்குதல் என்பது இது இரண்டாவது முறை. நான் ஒருமுறை மாணவரணி திருச்சி மாவட்ட அமைப்பாளராக இருந்தேன்.
கண்டித்த கலைஞர்
அப்போது அப்பா திருச்சி சிவா புறக்கணிக்கப்படுவதாக கூறி 500க்கும் மேற்பட்ட கட்சியினருடன் சென்று கே.என்.நேரு அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அதன்பிறகு எனது நிறுவனம், அலுவலகம் உள்ளிட்டவை தாக்குதலுக்கு ஆளானது. அப்போது கலைஞர்
கடுமையாக கண்டித்தார். தற்போது இருக்கக்கூடிய தலைவர் அதேபோல் செய்வாரா? எனத் தெரியவில்லை.
சிக்கிய முத்துச்செல்வன்
சரியாக சொல்ல வேண்டுமென்றால் திமுகவின் உண்மையான குணம் இதுதான். தூத்துக்குடியிலும் சசிகலா புஷ்பா வீட்டில் அமைச்சர் கீதா ஜீவன் தூண்டுதலின் பேரில் தான் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற தாக்குதலில் கே.என்.நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் முன்னால் நின்று நடத்தியிருக்கிறார். மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்க்கும் போது தெரிய வந்தது.
திமுகவின் உண்மை முகம்
இவர் ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை மோசமான வார்த்தைகளால் பேசி விமர்சித்த ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தன்னுடனேயே கே.என்.நேரு நெருக்கமாக வைத்துக் கொண்டார். அந்த அளவிற்கு முக்கியமான நபராக இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பின்னர் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது.
அமைச்சர் சொல்லாமல் இந்த தாக்குதல் நடந்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது. நான் வேற கட்சியில் இருப்பதால் ஆளுங்கட்சிக்குள் ஒரு அமைச்சர் இப்படி செய்வது சரியல்ல என்பது மட்டும் தான் என்னுடைய கருத்து என திருச்சி சூர்யா கூறினார்.