திருவாரூரில் 316 பயனாளிகளுக்கு ரூ.4.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்கள். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சுற்றுச்சுழல் காலநிலை – மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழக தலைவர் உ.மதிவாணன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் பி.பிரியங்கா, திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் உடனுக்குடன் அவர்களுக்கு சென்றடைகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசானது மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் (15.03.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 79 பயனாளிகளுக்கு விதவை மகள் திருமணத்திற்கான நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்கமும், 5 பயனாளிகளுக்கு ஆதரவற்ற பெண் திருமணத்திற்கான நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்கமும், 3 பயனாளிகளுக்கு விதவை மறுமண திருமணத்திற்கான நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்கமும், 13 பயனாளிகளுக்கு கலப்பு திருமணத்திற்கான நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்கமும், 27 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நிதி ஆதரவு திட்டமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,

ஊரக வளர்ச்சிதுறை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணையும், தொழில் வணிகத்துறை (மாவட்ட தொழில் மையம்) சார்பில் பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான மானியத்தொகைக்கான ஆணையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விதை தொகுப்பு, பழக்கன்றுகளும், தாட்கோ சார்பில் 9 பயனாளிகளுக்கு டிராக்டர்களும், தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகைக்கான ஆணையும், 8 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணையும், 4 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் நிவாரணமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு தார்ப்பாய்களும், பயனாளிக்கு தெளிப்பான் கருவியும், 1 2 பயனாளிகளுக்கு பண்ணை கருவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணியிடத்திற்கான ஆணையும்,

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், வருவாய்த்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு இலவச உதவித்தொகைக்கான பயனாளிகளுக்கு பட்டாவும், 20 பயனாளிகளுக்கு முதியோர் ஆணையும், பொது சுகாதாரத்தின் சார்பில் மகப்பேறு உதவித்தொகைக்கான ஆணையும், 10 ஊரக வளர்ச்சிதுறை (மகளிர் திட்டம்) சார்பில் 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டிற்கான சாவியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு வளர்ச்சியின் சார்பில் 5 பயனாளிக்கு ஊட்டச்சத்து பெட்டகமும்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையும், விளையாட்டுத்துறை (நேரு யுவகேந்திரா) சார்பில் சிறந்த இளைஞர் மன்ற விருது 1 நபர்க்கு என 316 பயனாளிக்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா,

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, செல்வி.கீர்த்தனா மணி, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் கலியபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.